வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Updated : வியாழன், 17 செப்டம்பர் 2020 (11:40 IST)

மேஷம்: புரட்டாசி மாத ராசி பலன்கள்

(அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்) - கிரகநிலை: ராசியில் செவ்வாய்(வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - சுக ஸ்தானத்தில் சுக்ரன்  - பஞ்சம  ஸ்தானத்தில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சனி என கிரகங்கள் வலம்  வருகின்றன.  

பலன்:
இந்த மாதம் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.   திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.
 
மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை குறையும். அதிக மதிப்பெண் எடுக்க ஆர்வமாக படிப்பீர்கள். 
 
அஸ்வினி:
இந்த மாதம்  பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக  முடியும்.  வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள்.
 
பரணி:
இந்த மாதம் பண புழக்கம் திருப்தி தரும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை நீங்கும். பாடங்கள் படிப்பதில் வேகம்  காட்டுவீர்கள். பாராட்டு கிடைக்கலாம். எனினும் வீண் அலைச்சல், தடை, தாமதம் உண்டாகும்.

 
கார்த்திகை 1ம் பாதம்:
இந்த மாதம் காரியங்கள் தடைபட்டாலும் பின்னர் நன்றாக நடந்து முடியும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். பணம் வரத்து  எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும்,  தொழில் வியாபாரம் சீராக நடக்கும்.
 
பரிகாரம்: செவ்வாய்கிழமையில் நவகிரகத்தில் செவ்வாய அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வணங்குவது வாழ்வில் முன்னேற்றத்தை தரும். 
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 22, 23
அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 17; அக்டோபர் 13, 14.